சுடச்சுட

  
  spt3

  சிட்னி, ஆக. 20: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தாற்காலிக பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா பங்கேற்கும் ஒருநாள் ஆட்டங்களில் இவர் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார். இதுவரை தலைமைப் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர் தாற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக்சன் இதுவரை உதவி பயிற்சியாளராக இருந்தார். அவரது பயிற்சித் திறமையை அறிந்து கொள்ளும் வகையில் அவருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 2-ல் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது மிக்கி ஆர்தர் பயிற்சியாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai