சுடச்சுட

  
  spt9

  லண்டன், ஆக. 20: சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது தென்னாப்பிரிக்கா.

  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

  இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

  இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 101.2 ஓவர்களில் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து 107.3 ஓவர்களில் 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  இதையடுத்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய தென்னாப்பிரிக்கா 351 ரன்கள் எடுத்தது.

  பின்னர் 346 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து ஆட்டத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

  இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும், தென்னாப்பிரிக்காவிடம் பறிகொடுத்தது.

  இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி வெற்றியில் முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்காவின் பிலாண்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார்.

  இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி ரன் குவித்த தென்னாப்பிரிக்காவின் ஆம்லா, இங்கிலாந்தின் மேட் பிரையர் ஆகியோருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

  கடந்த ஆண்டு ஆகஸ்டில் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. அப்போது இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது. ஓராண்டு வரை முதலிடத்தில் இருந்து இங்கிலாந்து அணியை இப்போது தென்னாப்பிரிக்கா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

  அணி புள்ளி

  தென்னாப்பிரிக்கா    120

  இங்கிலாந்து    117

  ஆஸ்திரேலியா    116

  பாகிஸ்தான்    109

  இந்தியா    104

  இலங்கை    98

  மேற்கிந்தியத்தீவுகள்    90

  நியூஸிலாந்து    80

  வங்கதேசம்    0

  சுருக்கமான ஸ்கோர்

  தென்னாப்பிரிக்கா: 309 (பிலாண்டர் 61, டுமினி 61, ஃபின் 4/75) & 351 (ஆம்லா 121, டிவில்லியர்ஸ் 43, ஃபின் 4/74)

  இங்கிலாந்து: 315 (பேர்ஸ்டோவ் 95, பெல் 58, மோர்னே மோர்கல் 4/80, ஸ்டெயின் 4/94) & 294 (பிரையர் 73, டிராட் 63, பிலாண்டர் 5/30)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai