சுடச்சுட

  
  spt5

  சின்சினாட்டி, ஆக. 20: சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பட்டம் வென்றார்.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-0, 7-6 (9/7) என்ற செட் கணக்கில் பெடரர் வீழ்த்தினார்.

  டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெடரர், சின்சினாட்டி மாஸ்டர்ஸ் பட்டத்தை 5-வது முறையாக வென்றுள்ளார். இதற்கு முன்பு வேறு எவரும் இந்தப் போட்டியில் 5 முறை சாம்பியன் ஆனதில்லை.

  மேலும் இந்த சீசனில் அவர் வென்றுள்ள 6-வது பட்டம் இது. இரண்டாவது நிலை வீரரான ஜோகோவிச்சுடன் பெடரர் இதுவரை 28 முறை மோதியுள்ளார். இதில் 16 முறை வென்றுள்ளார்.

  இந்திய ஜோடி தோல்வி: இதே போட்டியின் ஆடவர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ரோஹன் பூபதி இணை, ஸ்வீடன் ராபர்ட் லின்ட்ஸ்டெட் - ருமேனியாவின் ஹரியா டீக்கா இணையை எதிர்கொண்டது. இதில் 4-6,4-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.

  லீ நா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சீனாவின் லீ நா - ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் மோதினர். இதில் முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் லீ நா இழந்தார். எனினும் அடுத்த இரு செட்களிலும் கடுமையாகப் போராடிய லீ நா 6-3,6-1 என்ற செட் கணக்கில் வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai