சுடச்சுட

    
    spt8

    ஹைதராபாத், ஆக. 20: நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுகவனத்துடன் விளையாடுவேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

    நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. பல மாதங்கள் இடைவெளிக்குப் பின் சச்சின் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாட இருக்கிறார். இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக சச்சின் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது: நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது விளையாட இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டேன். எனது மகனுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்தேன். நீண்ட நாள்களுக்குப் பின் திரைப்படம் பார்க்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அதிக நேரம் கிடைத்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்ற குறை இருந்தது. இப்போது அதனை ஓரளவு தீர்த்துவிட்டேன்.

    ஓய்வு எப்போது... எனினும் கிரிக்கெட் விளையாட உடல்தகுதி மிகமுக்கியம் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். ஜிம்மில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இப்போது சிந்திக்கவில்லை.

    டெஸ்ட் அல்லது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒன்றைத்தான் தேர்வு செய்து விளையாட வேண்டுமென்று நினைக்கவில்லை. இந்திய அணி அடுத்து டிசம்பர் மாதத்தில்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. அதில் எப்போதும்போல பங்கேற்பேன்.

    டெஸ்ட் போட்டியின் போது அதிக நேரம் களத்தில் நின்று விளையாட வேண்டியது அவசியம். இதற்காக போட்டிக்கு முன் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன். எனவே நியூசிலாந்துக்கு எதிராக முழுத் திறனுடனும், முழுகவனத்துடனும் விளையாடுவேன் என்றார் சச்சின்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai