சுடச்சுட

  

  இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுப்பார்: திராவிட் நம்பிக்கை

  Published on : 26th September 2012 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt3

  பெங்களூர், ஆக.21: நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் வி.வி.எஸ். லட்சுமணும், நானும் இல்லாத நிலையில் இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுப்பார் என்று ராகுல் திராவிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

  கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி படுதோல்வி கண்டது. இதனிடையே மூத்த வீரர்களான ராகுல் திராவிட், லட்சுமண் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் களம் காண்கிறது இந்திய அணி. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் சச்சினை நம்பியே உள்ளது இந்திய அணி.

  இது தொடர்பாக திராவிட் கூறியது: கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுத்து வருகிறார். நியூஸிலாந்து தொடரிலும் அது தொடரும் என்று நம்புகிறேன். இந்திய கிரிக்கெட்டில் லட்சுமண் மிகச்சிறந்த வீரர். அவருடன் விளையாடியதை கெüரவமாகக் கருதுகிறேன். களத்தில் மிகக்சிறந்த வீரரான லட்சுமண், மைதானத்துக்கு வெளியில் மிகச்சிறந்த மனிதர்.

  லட்சுமண் அவருக்கென்று சில உத்திகளை வைத்திருந்தார். அதன்படியே அவர் பயிற்சி மேற்கொள்வார். அணியில் இருந்த இளம் வீரர்களுக்கு அவர் மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார். அதனால் இளம் வீரர்கள் அவரை நன்றாக கவனித்திருப்பார்கள். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருப்பார்கள். எனவே இளம் வீரர்களில் சிலர் லட்சுமணுக்கு நிகராக விளையாடுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai