சுடச்சுட

  

  இருபது ஓவர் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணியில் பீட்டர்சனுக்கு இடமில்லை

  Published on : 26th September 2012 11:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  லண்டன், ஆக.21: இருபது ஓவர் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன் பீட்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.

  இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், பயிற்சியாளர் ஆன்டி பிளவர் குறித்து தரக்குறைவாக தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய பீட்டர்சன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

  இதன்பிறகு பீட்டர்சன் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார். இதனால் அவர் இருபது ஓவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்பை இழந்துள்ளார்.

  2010-ல் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த பீட்டர்சன், தொடர்நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய பீட்டர்சன் அதிரடியாக ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai