சுடச்சுட

    

    மும்பை, ஆக.21: ஐசிசி 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2013) ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. 23-ம் தேதி நிறைவடைகிறது.

    இங்கிலாந்தின் கார்டிஃப்பில் தொடங்கும் இப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை அணிகள் "ஏ' பிரிவிலும், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் "பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதி ஆட்டம் ஜூன் 19-ம் தேதியும், 2-வது அரையிறுதி ஆட்டம் ஜூன் 20-ம் தேதியும் நடைபெறுகின்றன.

    இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ஜூன் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சில போட்டிகள் பகலிலும், சில ஆட்டங்கள் பகலிரவாகவும் நடைபெறவுள்ளன.

    இது தொடர்பாக போட்டி இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில், "உலகின் 8 முன்னணி அணிகள் மோதும் ஆட்டத்தைப் பார்க்கும் அரிய வாய்ப்பை கிரிக்கெட் ரசிகர்கள் பெற்றுள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகள். 2013-ம் ஆண்டின் மிகச்சிறந்த போட்டியாக இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி அமையும்' என்றார்.

    போட்டி அட்டவணை

    நாள் மோதும் நாடுகள்    இடம்

    ஜூன் 6:    இந்தியா- தென் ஆப்பிரிக்கா    கார்டிஃப்

    ஜூன் 7:    மேற்கிந்தியத் தீவுகள்-பாகிஸ்தான்    ஓவல்

    ஜூன் 8:    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா    எட்கபாஸ்டன்

    ஜூன் 9:    இலங்கை-நியூஸிலாந்து    கார்டிஃப்

    ஜூன் 10:    பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா    எட்கபாஸ்டன்

    ஜூன் 11:    இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள்    ஓவல்

    ஜூன் 12:    ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து    எட்கபாஸ்டன்

    ஜூன் 13:    இங்கிலாந்து-இலங்கை    ஓவல்

    ஜூன் 14:    மே.இ.தீவுகள்-தென் ஆப்பிரிக்கா    கார்டிஃப்

    ஜூன் 15:    இந்தியா-பாகிஸ்தான்    எட்கபாஸ்டன்

    ஜூன் 16:    இங்கிலாந்து-நியூஸிலாந்து    கார்டிஃப்

    ஜூன் 17:    இலங்கை-ஆஸ்திரேலியா    ஓவல்

    ஜூன் 19:    முதல் அரையிறுதி    ஓவல்

    ஜூன் 20:    2-வது அரையிறுதி    கார்டிஃப்

    ஜூன் 23:    இறுதி ஆட்டம்    எட்கபாஸ்டன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai