சுடச்சுட

  
  spt7

  டெüன்ஸ்வில்லே, ஆக.21: 19 வயதுக்குட்பட்டோர் (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.

  ஆஸ்திரேலியாவின் டெüன்ஸ்வில்லே நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வில் பொசிஸ்டோ பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 1 ரன்னிலும், குளோட்டே ரன் ஏதுமின்றியும், டி புரூயின் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தென் ஆப்பிரிக்கா.

  இதன்பிறகு கேப்டன் போவெஸýம், கொயட்ஸீயும் 3 விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்க்க அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. போவெஸ் 46 ரன்கள் எடுத்தார். கொயட்ஸீ 50 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் சப்ராயென் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது.

  ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டீகீட்டீ 3 விக்கெட்டுகளும், குரிந்தர் சாந்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

  அதிர்ச்சி தொடக்கம்: பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் பெய்ர்சன், புக்கனன் ஆகியோர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர். இதன்பிறகு இணைந்த பான்கிராப்ட்-பேட்டர்சன் ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர்.

  பேட்டர்சன் 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பான்கிராப்டுடன் இணைந்தார் கேப்டன் பொசிஸ்டோ. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. பான்கிராப்ட் 66 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பொசிஸ்டோ 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  தென் ஆப்பிரிக்கா தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட் எடுத்தார். பான்கிராப்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  மற்றொரு அரையிறுதி: மற்றொரு அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கும்.

  3-வது இடத்துக்கான ஆட்டம்: 3-வது இடத்துக்கான ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் தோற்கும் அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai