சுடச்சுட

  

  ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட 10 விளையாட்டு அமைப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை

  Published on : 26th September 2012 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt6

  புது தில்லி, ஆக.21: ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட 10 விளையாட்டுகளின் தேசிய சம்மேளனங்களுக்கு ஆண்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

  மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மாக்கன் இது தொடர்பாக கூறியிருப்பது:

  நாட்டில் உள்ள விளையாட்டு சம்மேளனங்களுக்காக 2010-ல் புதிதாக ஆண்டுதோறும் பெறும் அங்கீகார விதிமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்த சம்மேளனங்கள் மட்டுமே அரசின் நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு தகுதியானவை. இப்போதைய நிலையில் 51 விளையாட்டு சம்மேளனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.

  வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) ஆண்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

  நிர்வாகத்தில் உள்ள மோதல்கள் மற்றும் பிரச்னைகள் காரணமாக ஹாக்கி, நெட்பால், த்ரோபால், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai