சுடச்சுட

  
  a1

   பெங்களூர், ஆக.22: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

   "ஹெர்பாலைஃப் இந்தியா' ஊட்டச்சத்து நிறுவனத்தின் சார்பில், பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால், மேரி கோம் ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

   அப்போது அந் நிறுவனத்தின் தலைவர் அஜய் கன்னா, வீராங்கனைகள் சாய்னா, மேரி கோம் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

   பின்னர் அஜய் கன்னா கூறியது: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சாய்னா, மேரி கோம் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்படும். மேலும் ஓர் ஆண்டுக்கு எங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக சாய்னா செயல்படுவார் என்றார்.

   சாய்னா நெவால் கூறியது:

   ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ஏனென்றால் பாட்மிண்டன் போட்டியில் சீனா வீராங்கனைகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகளில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்களே. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த பதக்கம் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. ஒலிம்பிக் பதக்கம் எதிர்காலங்களில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவும். ஒலிம்பிக் பதக்க மேடையில் நிற்பது என்பது எல்லா வீரர், வீராங்கனைகளுக்குமே உள்ள மிகப்பெரிய கனவு என்றார்.

   2 குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முயற்சித்தேன். ஆனால் வெண்கலமே கிடைத்தது. 2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai