சுடச்சுட

  

  தயான் சந்த் விருது: மல்யுத்த பயிற்சியாளர் வினோத் குமார் பெயர் பரிந்துரை

  Published on : 26th September 2012 11:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   புது தில்லி, ஆக.22: தயான் சந்த் விருதுக்கு மல்யுத்தப் பயிற்சியாளர் வினோத் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

   இதன்மூலம் இந்த ஆண்டில் மல்யுத்தப் போட்டிக்கு மட்டும் ஒரு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 3 அர்ஜுனா விருது, ஒரு துரோணாச்சார்யா விருது, ஒரு தயான் சந்த் விருது என மொத்தம் 6 விருதுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

   மல்யுத்த வீரர்கள் நர்சிங் பாஞ்சம் யாதவ், ரவீந்தர் குமார், வீராங்கனை கீதா போகத் ஆகியோர் அர்ஜுனா விருதுக்கும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யோகேஷ்வரின் பயிற்சியாளர் யஷ்விர் சிங்கின் பெயர் துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

   இது தொடர்பாக வினோத் குமார் கூறுகையில், "மல்யுத்தத்துக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருது எங்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், பாரம்பரியமிக்க மல்யுத்தப் போட்டியை விளையாடுவதற்கு இளம் தலைமுறையினரையும் தூண்டுவதாக அமையும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai