சுடச்சுட

  

  புது தில்லி, ஆக.22: துரோணாச்சார்யா விருதுக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்படாதது குறித்து தேர்வுக் குழுவினர் மீது சாடியுள்ளார் இந்திய பளு தூக்குதல் பயிற்சியாளர் ஹர்னம் சிங்.

   இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது:

   2010 காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்தேன். அப் போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

   கடந்த ஆண்டும் துரோணாச்சார்யா விருதுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் தொடர்ந்து இரு ஆண்டுகளாக நான் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன். சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கும் நான்தான் பயிற்சியாளர். அதில் இந்தியா 29 தங்கம் உள்பட 45 பதக்கங்களை வென்றது.

   துரோணாச்சார்யா விருதுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. தேர்வுக் குழுவினர் எந்த விதிகளை பின்பற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. மூப்பு அடிப்படையில் தேர்வு செய்தாலும் எனக்கு வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai