சுடச்சுட

  
  a2

  செயின்ட் ஜான்ஸ், ஆக.23: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

   சமீபத்தில் முடிவடைந்த நியூஸிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் காயம் காரணமாக விளையாடாத டேரன் பிராவோ, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறுகிறது.

   அணி விவரம்: டேரன் சமி (கேப்டன்), டுவைன் பிராவோ (துணை கேப்டன்), சாமுவேல் பத்ரி, டேரன் பிராவோ, ஜான்சன் சார்லெஸ், ஃபிடல் எட்வர்ட்ஸ், கிறிஸ் கெயில், கைரன் போலார்ட், சுனில் நரேன், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், ஆன்ட்ரே ரஸ்ஸல், மார்லன் சாமுவேல்ஸ், லென்ட் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai