சுடச்சுட

  
  a4

   மும்பை, ஆக.23: சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

   லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, சில நாள்கள் ஓய்வெடுக்க விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

   ஒலிம்பிக் கோல்டு குவெஸ்ட் அமைப்பின் சார்பில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4 பேருக்கு மும்பையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தேசிய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபி சந்த் கூறுகையில், "ஓய்வெடுக்க விரும்புவதால் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா பங்கேற்கமாட்டார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அவர் களமிறங்குவார். அதேநேரத்தில் காஷ்யப் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்பார்' என்றார்.

   சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி செப்டம்பர் 11 முதல் 16 வரை சீனாவின் சாங்ஜெü நகரில் நடைபெறுகிறது. ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி செப்டம்பர் 18 முதல் 23 வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai