சுடச்சுட

  
  a1

   சண்டீகர், ஆக.23: ஹரியாணா காவல் துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் குறித்து அம் மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஹரியாணா காவல் துறையைச் சேர்ந்த வீரர்களை கெüரவிக்கும் வகையில் தலைநகர் சண்டீகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பூபிந்தர் சிங், "விஜேந்தர் சிங் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் குத்துச்சண்டைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஈடுபடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

   விஜேந்தர் சிங் தொலைக்காட்சிகளில் மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் கருத்தில் கொண்ட ஹூடா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

   இது தொடர்பாக விஜேந்தர் சிங் கூறுகையில், "எந்த நிகழ்ச்சியை தொடர்புபடுத்தி பேசினார் என்பதை ஹூடா தெரிவிக்க வேண்டும். நட்பு ரீதியாகவே இதை கேட்கிறேன்' என்றார்.

   நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஜெய் பகவான், வட்டு எறிதல் வீராங்கனை சீமா அந்தில் ஆகியோருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஹூடா. ஆனால் சுமித் சங்வான், மற்றொரு குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார், வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai