சுடச்சுட

  

   புது தில்லி, ஆக.23: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.201.36 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

   மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், "பிசிசிஐ மொத்தம் ரூ.548.42 கோடி வருமான வரி கட்ட வேண்டியிருந்தது.

   வருமான வரித் துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் இப்போது ரூ.347.06 கோடி வருமான வரி பிசிசிஐயிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

   2009-10-ம் நிதியாண்டில் பி.சி.சி.ஐ. ரூ.413.59 கோடி வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால் அதில் ரூ.307.06 கோடியை மட்டுமே செலுத்தியுள்ளது. ரூ.106.53 கோடி பாக்கியுள்ளது.

   2004-05-ம் நிதியாண்டில் ரூ.49.51 கோடியும், 2005-06-ம் நிதியாண்டில் ரூ.85.32 கோடியும் பிசிசிஐ செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் ரூ.40 கோடி மட்டுமே செலுத்தியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai