சுடச்சுட

  
  a3

  டெளன்ஸ்வில்லே, ஆக.23: 19 வயதுக்குட்பட்டோர் (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் நுழைந்தது இந்திய அணி.

   வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி.

   ஆஸ்திரேலியாவின் டெüன்ஸ்வில்லே நகரில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

   முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பிரசாந்த் சோப்ரா, கேப்டன் உன்முகுத் சந்த் ஆகியோர் இந்தியாவின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

   இந்த ஜோடி 13.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. கேப்டன் உன்முகுத் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தமிழக வீரரான அபராஜித் களமிறங்கினார். சோப்ரா-அபராஜித் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 104 பந்துகளைச் சந்தித்த சோப்ரா 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார்.

   இந்திய அணி 138 ரன்களை எட்டியபோது அபராஜித் ஆட்டமிழந்தார். 61 பந்துகளைச் சந்தித்த அவர் 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்தவர்களில் விஜய் úஸôல் ரன் ஏதுமின்றியும், அக்ஷ்தீப் நாத் 11, விஹாரி 22, ஹர்மீத் சிங் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

   கமல் பாஸி, ரவிகாந்த் சிங் ஆகியோர் டக் அவுட் ஆகினர். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஸ்மித் படேல் 15, சந்தீப் சர்மா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

   நியூஸிலாந்து தரப்பில் பென் ஹார்ன் 3 விக்கெட்டுகளையும், மேத்யூ கின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

   நியூஸிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் டேவிட்சன் 6, பென் ஹார்ன் 10, ஜோ கார்ட்டர் 30, வில் யங் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது நியூஸிலாந்து.

   பின்னர் ஜோடி சேர்ந்த ராபர்ட் டானெல், காம் பிளெட்சர் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

   ஹர்மீத் சிங் 34-வது ஓவரையும், அபராஜித் 35-வது ஓவரையும் மெய்டனாக்கினர். இதனால் நியூஸிலாந்து நெருக்கடிக்குள் சிக்கியது. அதை சரியாகப் பயன்படுத்திய அபராஜித் டானெல்லை வெளியேற்றினார். அவர் 29 ரன்கள் எடுத்தார். டானெல்-பிளெட்சர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.

   பின்னர் வந்த நியென்ஸ் 14, சோதி 3 ரன்களில் வீழ்ந்தனர். தனிநபராகப் போராடிய பிளெட்சர் 53 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் நியூஸிலாந்து அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

   இந்தியத் தரப்பில் சந்தீப் சர்மா, ரவிகாந்த் சிங், ஹர்மீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

   44 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்த அபராஜித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

   இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

   19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 4-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2000, 2008 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 2006-ல் தோல்வி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

   3-வது இடம்: 3-வது இடத்துக்கான ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai