சுடச்சுட

  

   கோவை, ஆக. 24: கோவை பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான அழைப்பு கூடைப்பந்துப் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

   இது தொடர்பாக பி.எஸ்.ஜி. நிறுவன நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் டி.செல்வராஜ், சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் ஜி.செல்வராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

   48-வது பிஎஸ்ஜி கோப்பைக்கான ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் டேராடூன் ஓஎன்ஜிசி, லோனாவாலா இந்திய கப்பல் படை, சென்னை வருமான வரித் துறை, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே, சென்னை ஐஓபி, பெங்களூரு விஜயா வங்கி, சென்னை கஸ்டம்ஸ், பஞ்சாப் ஆர்சிஎப் உள்ளிட்ட அணிகள் மோத உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியிறுக்கு முன்னேறும்.

   11-வது சி.ஆர்.ஐ. கோப்பைக்கான மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் பிலாஸ்பூர் தென்கிழக்கு மத்திய ரயில்வே, கேரள மாநில மின் வாரியம், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே, சென்னை தெற்கு ரயில்வே, மும்பை மேற்கு ரயில்வே, கொல்கத்தா கிழக்கு ரயில்வே, சென்னை ரைசிங் ஸ்டார் அணிகள் பங்கேற்க உள்ளன.

   இப்போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை, இரண்டாம் இடம் பெறும் அணிக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை, அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.

   இது தவிர, பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியும் 38-வது ஆண்டாக நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்களைக் கொண்ட அணியும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

   செப்டம்பர் 2-ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் அகில இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் பி.ஜெ. சன்னி, தொழில்நுட்பக் குழுத் தலைவர் சம்பத்குமார், கோவை கலால் மற்றும் சுங்க வரித் துறை ஆணையர் ஏ.கே. ரகுநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

   

   

   

   

   

   

   

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai