சுடச்சுட

  

   சென்னை, ஆக.25: எம்.ஆர்.எஃப். சேலஞ்ச் 2012 கார் பந்தயத்துக்கான "ஃபார்முலா 2000' என்ற புதிய ரேஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

   சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் எஃப் 1 கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் இந்த புதிய ரேஸ் காரை அறிகமுகப்படுத்தினார்.

   எம்.ஆர்.எஃப். சேலஞ்ச் 2012 கார் பந்தயத்தின்போது 20 புதிய "ஃபார்முலா 2000' ரேஸ் கார்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்தப் போட்டி மொத்தம் 4 சுற்றுகளையும், 10 ரேஸ்களையும் உள்ளடக்கியது.

   முதல் சுற்று அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறுகிறது. ஃபார்முலா 1 இந்திய கிராண்ட்ப்ரீ போட்டிக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

   2-வது மற்றும் 3-வது சுற்றுகள் முறையே பிப்ரவரி 1 முதல் 3 வரையும், பிப்ரவரி 8 முதல் 10 வரையும் சென்னையில் நடைபெறவுள்ளன. இப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai