சுடச்சுட

  

   கரூர், ஆக. 25: கரூரில் சனிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு அவிநாசி மற்றும் நாமக்கல் அணிகள் முன்னேறியுள்ளன.

   கரூர் யுனிவர்சல் கால்பந்துக் குழு சார்பில், சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன.

   சனிக்கிழமை மாலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் அவிநாசி ஸ்பார்க் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கரூர் யுனிவர்சல் கால்பந்துக் குழு அணியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நாமக்கல் ஆர்.எப்.சி. அணி 3-1 என்ற கணக்கில் திருச்சி எல்லோரோஸ் அணியை வீழ்த்தியது.

   முன்னதாக நடைபெற்ற 2-வது சுற்றில் கரூர் யுனிவர்சல் கால்பந்துக் குழு அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருந்துறை செவன்வொண்டர்ஸ் அணியையும், திருச்சி எல்லோரோஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இரூர் கே.எஸ். மணியம் அணியையும் வீழ்த்தின.

   அவிநாசி ஸ்பார்க் அணி 4-1 என்ற கணக்கில் எடப்பாடி கால்பந்து குழு அணியையும், நாமக்கல் ஆர்.எப்.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி அணியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

   கரூர் டென்னிஸ் அகாதெமியைச் சேர்ந்த எம்.ஜி.ராஜன், யுனிவர்சல் கால்பந்துக் குழுத் தலைவர் டி.எஸ். சீனிவாசன் ஆகியோர் முதல் ஆட்டத்தைத் தொடங்கிவைத்தனர். முதல் காலிறுதி ஆட்டத்தை கரூர் மாவட்ட கால்பந்துக் கழகத் தலைவர் கே. அசோக்குமார் தொடக்கிவைத்தார்.

   ஞாயிற்றுக்கிழமை மேலும் இரு காலிறுதி ஆட்டங்கள், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai