சுடச்சுட

  
  a2

  புது தில்லி, ஆக.25: தில்லியில் நடைபெற்று வரும் நேரு கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது.

   இதன்மூலம் இந்தப் போட்டியில் இந்திய அணி 2-வது வெற்றியை ருசித்துள்ளது. முன்னதாக இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சிரியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

   தில்லியில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மாலத்தீவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் மாலத்தீவு வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தைக் கையாண்டதால் முதல் 40 நிமிடங்களில் இந்தியாவுக்கு கோல் கிடைக்கவில்லை.

   இருப்பினும் 45-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோலடிக்க முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் சயீத் ரஹிம் நபி கோலடிக்க இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

   ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி

   மீண்டும் கோலடிக்க இந்தியாவின் வெற்றி உறுதியானது. மாலத்தீவு வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும், கடைசி வரை அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 3-0 என்ற கணக்கில் மாலத்தீவை வெற்றி கண்டது.

   இதுவரை மாலத்தீவு அணியுடன் 17 முறை மோதியுள்ள இந்திய அணிக்கு இது 11-வது வெற்றியாகும். இவ்விரு அணிகளும் முன்னதாக 2011-ல் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன கோப்பை கால்பந்து போட்டியில் மோதின. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai