சுடச்சுட

  

  பாலோ- ஆன் பெற்றது நியூஸிலாந்து: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராட்டம்

  Published on : 26th September 2012 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a3

   ஹைதராபாத், ஆக. 25: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 159 ரன்களில் சுருண்டது. இதனால்

   அந்த அணி பாலோ-ஆன் பெற்றது.

   பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

   ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 134.3 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

   பாலோ-ஆன்: இதன்பிறகு முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான சனிக்கிழமை மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது.

   தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் வான்விக்கை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார் உமேஷ் யாதவ். 14 பந்துகளைச் சந்தித்த அவர் ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு நியூஸிலாந்தின் சரிவு தவிர்க்க முடியாததானது. அனுபவமற்ற நியூஸிலாந்து வீரர்களால் இந்திய சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை.

   பின்னர் வந்த பிரேஸ்வெல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜீதன் படேல் 10 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டிரென்ட் பெüல்ட் (4 ரன்கள்), கிறிஸ் மார்ட்டின் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் நியூஸிலாந்தின் இன்னிங்ஸ் 61.3 ஓவர்களில் 159 ரன்களில் முடிவுக்கு வந்தது. ஜேம்ஸ் பிராங்க்ளின் 43 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

   இந்தியத் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ஓஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து பாலோ ஆன் பெற்ற நியூஸிலாந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2-வது இன்னிங்ûஸ ஆடியது.

   தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் 16 ரன்களில் ஓஜா பந்துவீச்சில் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

   அந்த அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் மைதானம் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து மதியம் 2.56 மணிக்கு 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

   அப்போது மெக்கல்லம் 16, கேன் வில்லியம்சன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக 3-வது நாளான சனிக்கிழமை 37.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.

   மிரட்டும் மழை

   இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து அணி இன்னும் 238 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அடுத்த இரு நாள்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்

   துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை வருணபகவான் வழிவிட்டால் மட்டுமே இந்தியா வெற்றிபெற வாய்ப்புள்ளது. மழையில்லாமல், சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும்பட்சத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்

   புள்ளது.

   அசத்திய அஸ்வின்!

   முதல் இன்னிங்ஸில் 16.3 ஓவர்களை வீசிய அஸ்வின் 31 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இதில் 5 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

   3-வது நாளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் ஒரு ரன் மட்டுமே கொடுத்துள்ளார்.

   முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 47 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அஸ்வினின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. டெஸ்ட் போட்டியில் 3-வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இந்தப் போட்டியில் பேட்டிங்கிலும் அஸ்வின் 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

   சுருக்கமான ஸ்கோர்

   இந்தியா -438 (புஜாரா 159, தோனி 73, கோலி 58, சேவாக் 47, ஜீதன் படேல் 4வி/100, பெüல்ட் 3வி/93)

   நியூஸிலாந்து

   முதல் இன்னிங்ஸ்-159 (பிராங்க்ளின் 43*, வில்லியம்சன் 32, அஸ்வின் 6வி/31, பிரக்யான் ஓஜா 3வி/44)

   2-வது இன்னிங்ஸ்-41/1 (கப்டில் 16, மெக்கல்லம் 16*, பிரக்யான் ஓஜா 1வி/13)

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai