சுடச்சுட

  

  யு-19 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

  Published on : 26th September 2012 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெளன்ஸ்வில்லே, ஆக.25: 19 வயதுக்குட்பட்டோர் (யு-19) உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

   ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்படும் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா 4-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்குகிறது. அதேநேரத்தில் இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது.

   இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. போட்டியின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்ற இந்திய அணி, பெüலர்களின் அபார பந்துவீச்சால் காலிறுதியில் பாகிஸ்தானையும், அரையிறுதியில் நியூஸிலாந்தையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

   இந்திய அணியைப் பொறுத்தவரையில் விஜய் úஸôல் இதுவரை ஒட்டுமொத்தமாக 150 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் கேப்டன் உன்முகுத் சந்த், பிரசாந்த் சோப்ரா உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

   இந்திய பெளலர்கள் கமால் பாஸி 10 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 8

   விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

   இதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்மீத் சிங், அபராஜித் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி வெற்றித் தேடித்தந்தனர். அபராஜித் பேட்டிங், பெüலிங் என இரு துறைகளிலும் ஜொலித்து வருவது கூடுதல் பலம்.

   பலம் வாய்ந்த பேட்டிங்: சொந்த மண்ணில் நடைபெறும் இப் போட்டியில் கோப்பையை தக்கவைத்துக் கொள்ள ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடும். அந்த அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.

   தொடக்க ஆட்டக்காரர் பான் கிராப்ட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கார்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதி ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் பான்கிராப்ட் ஏற்கெனவே சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   பெளலிங்கிலும் அந்த அணி பலம் வாய்ந்ததாகவே காணப்படுகிறது. இந்த முறை ஆஸ்திரேலியா வெற்றிபெற்றால், தொடர்ந்து இரு முறை கோப்பையை வென்ற 2-வது அணி என்ற பெருமையைப் பெறும். இப்போதைய நிலையில் அடுத்தடுத்து இரு முறை கோப்பையை வென்ற ஒரே அணி பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

   போட்டி நடைபெறும் டோனி அயர்லேன்ட் மைதானம் பெளலிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai