சுடச்சுட

  

   டெளன்ஸ்வில்லே, ஆக.25: 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்தது தென் ஆப்பிரிக்கா.

   ஆஸ்திரேலியாவின் டௌன்ஸ்வில்லேவில் சனிக்கிழமை நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.

   முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 36.5 ஓவர்களில் 90 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 14.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி கண்டது.

   அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கார்ட்டெர் 20, நீய்னென்ஸ் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள், சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் அந்த அணி 90 ரன்களில் சுருண்டது.

   தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரோடா 4 விக்கெட்டுகளையும், பிரைலிங்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

   பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் போவெஸ் 12, டி காக் 50 ரன்கள் எடுத்தனர். 14.4 ஓவர்களில் அந்த அணி 94 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ரோஸியர் 9,

   டி புரூயின் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai