சுடச்சுட

  
  5a

  நியூயார்க், ஆக.26: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கள்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி நிறைவடைகிறது.

  ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியைப் பொறுத்தவரையில் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காயம் காரணமாக விலகிவிட்டார். இதனால் சாம்பியன் பட்டம் வெல்வதில் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோருக்கு இடையில் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  20004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெடரர், 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்போடு களம் காண்கிறார்.

  அதேநேரத்தில் நடப்புச் சாம்பியன் ஜோகோவிச் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடுவார். இந்தியாவின் சார்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மகளிர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா, முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோரிடையே பட்டம் வெல்வதில் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai