சுடச்சுட

  

   கோவை, ஆக.27: கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான இவாஞ்சலின் 20-வது நினைவு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை முதல் (ஆக.28) நடைபெற உள்ளன.

   இப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை முதல் வரும் செப்.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்கள் பிரிவில் கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கபடி மற்றும் ஹாக்கிப் போட்டிகளும், பெண்கள் பிரிவில் கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கபடிப் போட்டிகளும் நடைபெறுகின்றன. தடகளப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்துவரும் 269 அணிகளில் சுமார் 3 ஆயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். முறைப்படியான போட்டி தொடக்க விழா வரும் 30-ம் தேதியும், நிறைவு விழா வரும் செப்.1-ம் தேதியும் நடைபெற உள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai