சுடச்சுட

  
  a4

   புது தில்லி, ஆக. 27: கிரிக்கெட் வீரர்கள் ராகுல் திராவிட், கெüதம் கம்பீர் ஆகியோரது பெயர்கள் முறையே பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு பரிந்துரைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது.

   இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் என். சீனிவாசன், செயலாளர் சஞ்சய் ஜக்தால் ஆகியோர் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளனர். விரைவில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அவர்கள் இருவரது பெயரும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான திராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆயிரத்துக்கு அதிகமாக ரன்களை எடுத்துள்ளார். 134 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 36 சதங்களை எடுத்துள்ளார். இதில் 12 சதங்கள் மிகக் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.

   இந்திய அணியின் தொடக்க வீரராக உள்ள கம்பீர், ஏற்கெனவே அர்ஜுனா விருது பெற்றுள்ளார். திராவிட்டின் பெயர் பரிந்துரைக்கப்படும் பத்ம பூஷண் விருது, இந்தியாவில் பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருதுகளுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய கெüரவத்துக்குரிய விருது.

   கிரிக்கெட் வீரர்களில் சச்சின் மட்டுமே பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். அவரது பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளது. சுநீல் காவஸ்கர், கபில் தேவ், லாலா அமர்நாத் உள்ளிட்ட 9 கிரிக்கெட் வீரர்கள் இதுவரை பத்ம பூஷண் விருது பெற்றுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai