சுடச்சுட

  

   புது தில்லி, ஆக. 28: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முக்கிய விளம்பரதாரரான டிஎல்எஃப் (டில்லி லேண்ட் அண்டு பைனான்ஸ்) நிறுவனம் தனது விளம்பர ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளது.

   கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி, டிஎல்எஃப் - ஐபிஎல் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் முக்கிய விளம்பரதாரர் என்ற நிலையில் இருந்து விலகிக் கொள்ள டிஎல்எஃப் நிறுவனம் முடிவு செய்தது.

   பிற விளையாட்டுகளை மேம்படுத்தவும், அதன் மூலம் அதிக விளம்பரம் தேடிக் கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

   லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் நால்வருக்கு டிஎல்எஃப் நிறுவனம் கார்களை பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளாக ஐபிஎல்-லின் முதன்மை விளம்பரதாரராக இருப்பதற்காக ரூ.250 கோடியை அந்நிறுவனம் செலவு செய்துள்ளது.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai