சுடச்சுட

  

   கோவை, ஆக. 28: பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கூடைப்பந்து போட்டியில் கப்பற்படை, ஓஎன்ஜிசி அணிகள் வெற்றி பெற்றன.

   கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான போட்டிகளை கல்லூரி முதல்வர் ஆர்.ருத்ரமூர்த்தி தொடங்கி வைத்தார். ஏ-குரூப்பில் கப்பற்படை அணியும், தெற்கு மத்திய ரயில்வே அணியும் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கப்பற்படை அணியினரின் ஆட்டத்தின் முன், மத்திய ரயில்வே அணியினரின் ஆட்டம் எடுபடவில்லை. இறுதியில், 73-54 என்ற புள்ளிக் கணக்கில் கப்பற்படை அணி வென்றது.

   இரண்டாவது போட்டியில் வருமான வரித்துறை அணியும், ஓஎன்ஜிசி அணியும் மோதின. இதில், 69-46 என்ற புள்ளிக் கணக்கில் ஓஎன்ஜிசி அணி வென்றது. சிஆர்ஐ கோப்பைக்கான பெண்கள் போட்டியில் குரூப் பி-பிரிவில் தெற்கு ரயில்வே அணி, மேற்கு ரயில்வே அணியை 74-59 என்ற புள்ளிக் கணக்கிலும், கிழக்கு ரயில்வே அணி, ரைசிங் ஸ்டார் அணியை 69-64 என்ற புள்ளிக் கணக்கிலும் வென்றது.

   முன்னதாக, மகளிர்க்கான போட்டியை சர்வஜன மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி தொடங்கிவைத்தார். பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், சிஆர்ஐ பம்ப் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் ஜி.செல்வராஜ் உடனிருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai