சுடச்சுட

  

  கோவையில் இவாஞ்சலின் நினைவு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

  Published on : 26th September 2012 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a2

  கோவை, ஆக.28: கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான, இவாஞ்சலின் நினைவு 20-வது விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

   தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 270 கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்:

   கால்பந்து (ஆண்கள்): சென்னை பேட்ரீசியன் கலை அறிவியல் கல்லூரி அணி, கேரளத்தின் அக்யுனாஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்றது. நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டிருந்தன.

   நாகர்கோவில் லயோலா தொழில்நுட்பக் கல்லூரி அணி, கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி அணியை 3-0 என்ற கணக்கிலும், சென்னை லயோலா கல்லூரி அணி, கோவை அரசு கலைக் கல்லூரியை 5-0 என்ற கணக்கிலும், வடக்கஞ்சேரி ஸ்ரீ வியாசா அணி, கேரளத்தின் யுசி கல்லூரியை 2-1 என்ற கணக்கிலும் வென்றன.

   கைப்பந்து: பெண்களுக்கான போட்டியில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் அணி, கோவை சசூரி அகாதெமி அணியை 25-6, 25-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆண்களுக்கான போட்டியில் கோவை கொங்குநாடு அணி, சிஐடி அணியை 25-20, 25-20 என்ற கணக்கிலும், கற்பகம் பல்கலை. அணி, அமிர்தா பல்கலை. அணியை 25-17, 26-24 என்ற கணக்கிலும் வென்றது.

   பெண்கள் கபடி: கோவை ரங்கநாதன் கல்லூரி அணி, திருப்பூர் டெர்ப் அகாதெமி அணியை 36-35 என்ற கணக்கில் வென்றது. ஆண்கள் கபடியில் கோவை கொங்குநாடு அணி, ஈரோடு கல்லூரி அணியை 41-14 என்ற புள்ளிக் கணக்கிலும், விவேகானந்தா பல்கலை. அணி, தஞ்சை பிரிஸ்ட் பல்கலைக்கழக அணியை 35-23 என்ற புள்ளிக் கணக்கிலும், கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி அணி, கோவை சி.ஐ.டி. கல்லூரி அணியை 38-22 என்ற கணக்கிலும், திருநெல்வேலி பிஎஸ்என் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணியை 35-9 என்ற கணக்கிலும் வென்றன.

   கூடைப்பந்து: ஆண்களுக்கான போட்டியில் கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி, திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலை. அணியை 63-55 என்ற கணக்கிலும் கோவை சி.ஐ.டி. அணி, விவேகானந்தா பல்கலை. அணியை 37-4 என்ற கணக்கிலும், கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி அணி, பாரதியார் பல்கலை. அணியை 20-0 என்ற கணக்கிலும், கோவை ஜி.ஆர்.டி. அணி, கற்பகம் பல்கலை. அணியை 31-12 என்ற கணக்கிலும் வென்றன.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai