சுடச்சுட

  

  சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: பிரதீப் குமார் அதிர்ச்சித் தோல்வி

  Published on : 26th September 2012 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a1

   கோவை, ஆக.28: கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியின் 6-வது சுற்று முடிவில் 5 வீரர்கள் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

   கோவை செஸ் மேட்ஸ் சார்பில் கணபதி பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில், ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 245 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

   செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் 5 பேர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளனர்.

   6-வது சுற்றின் முக்கிய முடிவுகள்: ராம் எஸ்.கிருஷ்ணன் (பி.எஸ்.என்.எல்.), சர்வதேச மாஸ்டர் டி.பி.சிங் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

   எம்.குணால் (தமிழகம்), சர்வதேச மாஸ்டர் ராமநாதன் பாலசுப்பிரமணியன் (ஐசிஎஃப்) இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது. தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள எம்.விவேக் (தமிழகம்), 7-வது இடத்தில் உள்ள ஆர்.ஏ. பிரதீப்குமாரை (தமிழகம்) வென்றார். 15-வது நகர்த்தலுக்குப் பின், விவேக் முன்னிலை பெற்றிருந்தார்.

   5-வது சுற்றின் முக்கிய முடிவுகள்: செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற 5-வது சுற்றில் பி.பூபாலன் (ஐசிஎஃப்), எம்.குணாலிடம் (தமிழகம்) தோல்வியடைந்தார். ஆர்.கணேஷ் (தமிழகம்), சர்வதேச மாஸ்டர் ராமநாதன் பாலசுப்பிரமணியத்திடம் டிரா செய்தார். சர்வதேச மாஸ்டர் டி.பி.சிங் (தெற்கு ரயில்வே), ஃபிடே மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்தை (ஓஎன்ஜிசி) தோற்கடித்தார்.

   ÷6-வது சுற்று முடிவில் ராம் எஸ்.கிருஷ்ணன், சர்வதேச மாஸ்டர் டி.பி.சிங், எம்.குணால், பி.மகேஸ்வரன், எம்.விவேக் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai