Enable Javscript for better performance
தேசிய விளையாட்டு விருதுகள்: குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய விளையாட்டு விருதுகள்: குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார்

    Published on : 26th September 2012 11:36 AM  |   அ+அ அ-   |    |  

    a7

     புது தில்லி, ஆக. 28: தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதன்கிழமை வழங்குகிறார். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

     லண்டன் ஒலிம்பிக், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமார், மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுகின்றனர். 25 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட இருக்கிறது. பயிற்சியாளர்கள் 8 பேர் துரோணாச்சாரியார் விருது பெறவுள்ளனர்.

     இது தவிர தேசிய வீர,தீர செயல்களுக்கான விருதும் இந்த விழாவின்போது வழங்கப்பட இருக்கிறது. விளையாட்டு வீரர்களை கெüரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக பதக்கங்கள் வென்றுள்ளதால் இப்போது நடைபெறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.ராஜீவ் கேல் ரத்னா விருதுடன் ரூ.7.5 லட்சம் ரொக்கம், பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும். புற்றுநோயில் இருந்து விடுபட்டு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், அர்ஜுனா விருது பெறுகிறார்.

    kattana sevai