சுடச்சுட

  

  பெங்களூர், ஆக. 28: இந்தியா, நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.

   இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முன்னதாக ஹைதராபாதில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

   இந்நிலையில் இரு அணி வீரர்களும் ஹைதராபாதில் இருந்து சிறப்பு விமானத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் பெங்களூருக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அவர்கள் ஹோட்டலுக்குச் சென்றனர். புதன்கிழமை முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். நியூஸிலாந்து வீரர்கள் காலை 10 மணியளவிலும், இந்திய வீரர்கள் பிற்பகல் 2 மணிக்குப் பின்னரும் வலைப் பயிற்சி மேற்கொள்வார்கள் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai