சுடச்சுட

  
  a3

   புது தில்லி, ஆக. 28: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, பைக்குகள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

   இந்த ஆர்வமே அவரை சர்வதேச அளவில் பைக் ரேஸ் அணியை உருவாக்கத் துண்டியுள்ளது. செக். குடியரசில் அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச சூப்பர் பைக் சாம்பியன்ஷிப் பைக் ரேஸில் தோனியின் அணி பங்கேற்கிறது. "எம்எஸ்டி ஆர்-என் ரேஸிங் டீம் இந்தியா' என்று தோனியின் அணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இப்போட்டியில் இந்த அணி மட்டுமே பங்கேற்கிறது.

   அணியில் பிரான்ஸ் வீரர் ஃபுளோரியன் மரினோ, பிரிட்டனின் டான் லின்ஃபுட் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவருமே சர்வதேச அளவில் பல பைக் ரேஸ்களில் வெற்றி பெற்றவர்கள். ஆண்ட்ரூ ஸ்டோன் என்பவர் அணியின் தொழில்நுட்ப இயக்குநராக உள்ளார். ஆசியாவில் பைக் ரேûஸ பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தோனி தவிர தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளிட்ட சிலரும் அணியின் உரிமையாளராக உள்ளனர். பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான தோனி, ஹெல்கேட் எக்ஸ்132, கவாசகி நின்ஜா, யமஹா 650சிசி மற்றும் ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரபல பைக்குகள் என மொத்தம் 22-க்கும் மேற்பட்ட பைக்குகளை வைத்துள்ளார். இதில் ஹெல்கேட் எக்ஸ்132 பைக் தெற்காசியாவில் தோனியிடம் மட்டுமே உள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai