சுடச்சுட

  

  யு.எஸ். ஓபன் 2-வது சுற்றில் பெடரர், ஷரபோவா சோம்தேவ் வெளியேற்றம்

  Published on : 26th September 2012 11:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a5

  நியூயார்க், ஆக. 28: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர், ஆன்டி முர்ரே, விக்டோரியா அசரென்கா, மரியா ஷரபோவா, கிம் கிளிஸ்டர்ஸ், நாடியா பெட்ரோவா, லீ நா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியின்போது கனமழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவது பாதிக்கப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் கால தாமதமாகவே போட்டிகள் தொடங்கின.

   ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் டொனால்ட் யங்கை எதிர்கொண்டார். இதில் 6-3,6-2,6-4 என்ற செட் கணக்கில் பெடரர் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

   பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 6-2,6-4,6-1 என்ற கணக்கில் ரஷியாவின் அலெக்ஸ் போகோமோலோவை வென்றார்.

   குரோஷியாவின் மரின் சிலிச், ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாஸ்கோ, ரஷியாவின் நிக்கோலே, அமெரிக்காவின் ஜேக் சோக் உள்ளிட்ட வீரர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார். அவர் ஸ்பெயின் வீரர் ரூபன் ஹிடால்கோவிடம் 6-3,6-2,3-6,6-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

   மகளிர் பிரிவு: முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-0,6-1 என்ற செட் கணக்கில் மிக எளிதாக ரஷியாவின் அலெக்சாண்ட்ராவை வென்றார்.

   ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா, ஹங்கேரியின் மெலிண்டாவை எளிதாக வென்றார்.

   பெலாரஸின் கிம் கிளிஸ்டர்ஸ், ரஷியாவின் நாடியா பெட்ரோவா, சீன வீராங்கனை லீ நா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், செக் குடியரசின் பெட்ரா விட்டோவா ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai