சுடச்சுட

  

   புது தில்லி, ஆக. 28: உடல் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் புதன்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறும். ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் அதே நகரில் பாரா ஒலிம்பிக் நடைபெறுவது வழக்கம்.

   இதில் இந்தியா சார்பில் 10 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் தட கள வீரர்கள். 3 பேர் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். நீச்சல், துப்பாக்கிச் சுடுதலில் தலா ஒருவர் போட்டியிடுகின்றனர்.

   இதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என அனைவரும் இந்திய அரசின் செலவில் லண்டன் சென்றுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு ஜெர்மனியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai