சுடச்சுட

  
  spt4

  லண்டன், ஆக. 29: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் என அனைத்துப் போட்டிகளில் இருந்தும் உடனடியாக விலகுவதாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் பறிகொடுத்தது. இது தவிர அணியின் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் - ஸ்டிராஸ் இடையே சுமுகமான உறவு இல்லை. இதுவே ஸ்டிராஸின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது.

  35 வயதாகும் ஸ்டிராஸ் இதுவரை 100 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று 7037 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 40.97. 127 ஒருநாள் ஆட்டங்களிலும்ம், 4 இருபது ஓவர் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

  2003-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்றார்.

  "கடந்த சில வாரங்களாக தீவிரமாக சிந்தித்த பிறகுதான் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். இனி சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க மாட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நலன் கருதியும், எனது தனிப்பட்ட நலனைக் கருத்தில் கொண்டும் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்' என்ற ஸ்டிராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் எடுக்க ஸ்டிராஸ் மிகவும் தடுமாறினார். இதனை மையமாகக் கொண்டு அணியின் மற்றொரு வீரர் பீட்டர்சன், தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். இந்தப் பிரச்னை பெரிதானதை அடுத்து பீட்டர்சன், இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ஸ்டிராஸýம் ஓய்வை அறிவித்துள்ளார்.

  இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள அலாஸ்டர் குக், டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai