சுடச்சுட

  

  கோவை, ஆக. 29: சி.ஆர்.ஐ. கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கூடைப்பந்து போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு மத்திய ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.

  கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியும், தென்மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில், தென்கிழக்கு மத்திய ரயில்வே அணியினர் 84-48 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றது.

  இரண்டாவது ஆட்டத்தில் தெற்கு ரயில்வே பெண்கள் அணியும் கிழக்கு ரயில்வே அணியும் மோதின.

  இதில், 71-45 என்ற புள்ளிக்கணக்கில் தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது. பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆண்கள் போட்டியில் ஓஎன்ஜிசி அணியும் தென்மத்திய ரயில்வே அணியும் மோதின. இதில், ஓஎன்ஜிசி அணி 64-45 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

  சென்னை ஐ.ஓ.பி. அணியும் சென்னை சுங்க இலாகா அணியும் மோதியதில் 85-44 என்ற புள்ளிக்கணக்கில் ஐ.ஓ.பி. அணி வென்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai