சுடச்சுட

  
  spt6

  திருப்பூர், ஆக. 29: தமிழக மகளிர் கோ-கோ அணிக்கு 12 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  தமிழக மகளிர் மூத்தோர் பிரிவு கோ-கோ அணிக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் திருப்பூர், ஃபிரண்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 8 மண்டலங்களில் இருந்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 45 மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளித் தாளாளர் டாக்டர். சிவசாமி தொடங்கி வைத்தார்.

  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட கோ-கோ அமைப்புச் செயலாளர் பழனிச்சாமி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அய்யன்துரை, காங்கயம் கார்மல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் ஆகியோர் வீராங்கனைகளைத் தேர்வு செய்தனர்.

  இதில், எஸ். சர்மிளா (கோவை), ஆர். மீனா, கே. சௌமியா, வி. ஸ்ரீதேவி, எஸ். கற்பகம் (சென்னை), எஸ். தீபிகா, பி. ஸ்ரீநிதி (திருப்பூர்), பி. பிரியங்கா (சிவகங்கை), என். பாலநாகேஸ்வரி, முத்துமாரி (மதுரை), எஸ். தர்ஷினி (காங்கயம்), ஏ. சங்கீதா (அம்பாசமுத்திரம்) ஆகிய 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

  தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் இதே பள்ளியில் 10 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai