சுடச்சுட

  

  செளதாம்டன், ஆக. 29: டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் என அனைத்து வகைப் போட்டித் தரவரிசையில் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா.

  இதற்கு முன்பு எந்த அணியும் மூன்று வகை கிரிக்கெட் தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருந்தது இல்லை. இந்த மாதத் தொடக்கத்தில் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் மட்டுமே தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருந்தது.

  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதன் மூலம் கடந்த 20-ம் தேதி டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை எட்டி சாதனை நிகழ்த்தியது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி.

  தென்னாப்பிரிக்க அணி பல ஆண்டுகளாக வலுவான அணியாகவும், சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாகவும் திகழ்கிறது. ஆனால் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் அந்த அணி இதுவரை வென்றது இல்லை. இது அந்த அணியின் துரதிருஷ்டமாக கருதப்படுகிறது. எனினும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பையை வென்று இந்தக் குறையைப் போக்க அந்த அணி வீரர்கள் முயற்சிப்பார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai