சுடச்சுட

  
  spt5

  சார்ஜா, ஆக. 29: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  ஷார்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 45.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது.

  42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் இளம் மிகவேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாஃபிக் 56 ரன்கள் எடுத்தார். உமர் அக்மல் 52 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாடாததால் அந்த அணி 198 ரன்களே எடுக்க முடிந்தது.

  ஆஸ்திரேலிய அணியும் கடும் போராட்டத்துக்குப் பின்னரே வெற்றி பெற முடிந்தது. பாகிஸ்தானின் பந்து வீச்சு அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது.

  ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் கிளார்க் 96 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தும். பெய்லி 88 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். பெய்லி கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

  இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai