சுடச்சுட

    

    நியூயார்க், ஆக. 29: யு.எஸ். ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணைந்து விளையாடவில்லை.

    இந்த இணை ஏற்கெனவே இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வென்றுள்ளதால் யு.எஸ். ஓபனிலும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

    முன்னதாக ஒலிம்பிக் போட்டியில் சானியா - பயஸýடன் இணைந்து பங்கேற்றார். இதனால் ஏற்பட்ட பிரச்னை இப்போதும் தொடர்கிறது என்று தெரிகிறது.

    யு.எஸ். ஓபனில் செக். குடியரசின் ஆண்ட்ரியா ஹலவஸ்கோவாவுடன் இணைந்து பூபதி பங்கேற்கிறார்.

    சானியா மிர்சா, பிரிட்டனின் கொலின் பிளெம்மிங்குடன் ஜோடி சேர்கிறார். பூபதி - சானியா இணை 2009 ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012 பிரெஞ்சு ஓபனிலும் கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai