சுடச்சுட

  
  spt2

  .புது தில்லி, ஆக. 29: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத் (மல்யுத்தம்) ஆகியோருக்கு "ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.

  தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கினார்.

  யுவராஜ் சிங் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இது தவிர பயிற்சியாளர்கள் 8 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும் வழங்கப்பட்டது.

  நமது நாட்டில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகஉயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா. இதில் பதக்கம், சான்றிதழ் ரூ.7.5 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கும்.

  வழக்கமாக கேல் ரத்னா விருது ஒரு வீரருக்குத்தான் வழங்கப்படும். ஆனால் இந்த முறை ஒலிம்பிக்கில் வீரர்கள் பலர் சாதித்துள்ளதை அடுத்த அந்த விதி தளர்த்தப்பட்டது.

  இதேபோல அர்ஜுனா விருதும் அதிகபட்சமாக 15 பேருக்கு மேல் வழங்கப்படுவது இல்லை. ஆனால் இந்த முறை அதிகம் பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது.

  விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  அர்ஜுனா விருது வென்றவர்கள்: தீபிகா குமாரி (வில்வித்தை), பம்பாய்லா தேவி (வில்வித்தை), சுதா சிங் (தட களம்), கவிதா ராம்தாஸ் ரெüத் (தட களம்), அஸ்வினி பொன்னப்பா (பாட்மிண்டன்), பி.காஷ்யப் (பாட்மிண்டன்), ஆதித்யா எஸ். மேத்தா (பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்), விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை), யுவராஜ் சிங் (கிரிக்கெட்), சர்தார் சிங் (ஹாக்கி), யஷ்பால் சோலங்கி (ஜூடோ), அனுப் குமார் (கபடி), சமிர் சுஹாக் (போலோ), அன்னு ராஜ் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), ஓம்கார் சிங் (துப்பாக்கி சுடுதல்), ஜாய்தீப் கர்மாகர் (துப்பாக்கி சூடுதல்), தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), சந்தீப் செஜ்வால் (நீச்சல்), சோனியா சானு (பளு தூக்குதல்), நரசிங் யாதவ் (மல்யுத்தம்), ராஜீந்தர் குமார் (மல்யுத்தம்), கீதா போகத் (மல்யுத்தம்), எம்.பிமோல்ஜித் சிங் (ஊஷு), தீபீகா மல்லிக் (ஊனமுற்றோர்களுக்கான தட களம்), ராமகிருஷ்ணா சிங் (ஊனமுற்றோர்களுக்கான தட களம்).

  பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் 8 பேர் "துரோணாச்சார்யா விருது' வழங்கி கெüரவிக்கப்பட்டனர். அதன் விவரம்: வீரேந்தர் பூனியா (தட களம்), சுனில் டபாஸ் (கபடி), யஷ்வீர் சிங் (மல்யுத்தம்), ஹரேந்திரா சிங் (ஹாக்கி), சத்யபால் சிங் (ஊனமுற்றோருக்கான தடகளம்), ஜே.எஸ்.பாட்டியா (தடகளம், வாழ்நாள் சாதனையாளர்), பவானி முகர்ஜி (டேபிள் டென்னிஸ், வாழ்நாள் சாதனையாளர்), பி.ஐ. ஃபெர்னாண்டஸ் (குத்துச்சண்டை, வெளிநாட்டுப் பயிற்சியாளர்).

  அர்ஜுனா மற்றும் துரோணாச்சார்யா விருது பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.

  ஜெக்ராஜ் சிங் மான் (தடகளம்), குந்தீப் சிங் (ஹாக்கி), வினோத் குமார் (மல்யுத்தம்), சுக்பீர் சிங் டோகஸ் (ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டு) ஆகியோருக்கு விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனையாளர்கள் "தியான் சந்த் விருது' வழங்கப்பட்டது. இதில் நினைவுப் பரிசும், ரூ. 5 லட்சம் ரொக்கமும் அடங்கும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai