சுடச்சுட

    

    ஒருநாள் கிரிக்கெட்டில் வெகு விரைவாக 3 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா. 57 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ள அவர் 3031 ரன்களை எடுத்துள்ளார்.

    மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், 69 ஒருநாள் ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.

    விராட் கோலி, தென்னாப்பிரிக்காவின் இப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மேற்கிந்தியத்தீவுகளின் கார்டன் கிரினிட்ஜ் ஆகியோர் 72 ஆட்டங்களில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்து 3-வது இடத்தில் உள்ளனர்.

    * இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 124 பந்துகளில் 150 ரன்களை (16 பவுண்டரிகள்) ஆம்லா எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அவரது அதிகபட்ச ரன்.

    *    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுதான்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai