சுடச்சுட

  

  கொழும்பு, ஆக. 30: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள சிறப்பான வீரர்களைக் கொண்ட டெஸ்ட் அணியில் இந்திய வீரர்களால் இடம் பிடிக்க முடியவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

  டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகிறது. இதில் இடம் பெறுவது பெரிய கெüரவமாகக் கருதப்படுகிறது. இந்த வீரர்களுக்கு விருது வழங்கியும் கெüரவிக்கப்படும்.

  கடந்த ஆண்டில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தபோதிலும், இந்திய வீரர்கள் யாரும் ஐசிசி டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மிகமோசமான தோல்விகளைச் சந்தித்ததே இதற்கு முக்கியக் காரணம்.

  அதே நேரத்தில் டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க வீரர்கள் 5 பேரும், இங்கிலாந்து வீரர்கள் 3 பேரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

  அணி வீரர்கள் விவரம் (பேட்டிங் வரிசைப்படி) குக் (இங்கிலாந்து), ஆம்லா (தென்னாப்பிரிக்கா), சங்ககரா (இலங்கை), காலிஸ் (தென்னாப்பிரிக்கா), கிளார்க் (ஆஸ்திரேலியா, கேப்டன்), சந்தர்பால் (மேற்கிந்தியத்தீவுகள்), பிரையர் (இங்கிலாந்து, கீப்பர்), பிராட் (இங்கிலாந்து), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), பிலாண்டர் (தென்னாப்பிரிக்கா), ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா), டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா, 12-வது வீரர்).

  வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். பேட்ஸ்மேன்கள் ஆம்லா, காலிஸ், இலங்கை வீரர் சங்ககரா ஆகியோர் தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்

  தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai