சுடச்சுட

  

  சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: டி.பி. சிங் சாம்பியன்

  By ஆர்.வேல்முருகன்  |   Published on : 26th September 2012 11:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  கோவை, ஆக. 30: கோவையில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் தெற்கு ரயில்வே வீரர் டி.பி.சிங் 8 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

  கோவையைச் சேர்ந்த செஸ் விளையாடுவோரின் பெற்றோர்களின் முயற்சியால் உருவான கோவை செஸ் மேட்ஸ் சார்பில், கணபதி பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில், ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

  8-வது சுற்றின் முடிவில் டி.பி. சிங் 7.5 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றிருந்தார்.

  வியாழக்கிழமை நடைபெற்ற 9-வது சுற்றில் சர்வதேச மாஸ்டர் ராமநாதன் பாலசுப்பிரமணியத்துடன் டிரா செய்ததால் அரைப் புள்ளிகளைப் பெற்றார் டி.பி. சிங். இதற்கு அடுத்ததாக தலா 7 புள்ளிகளுடன் விளையாடிய பிஎஸ்என்எல் வீரர் ராம் கிருஷ்ணன், ஓஎன்ஜிசி வீரர் அரவிந்த் சிதம்பரம் ஆகியோரிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

  அதையடுத்து இருவரும் தலா 7.5 புள்ளிகளைப் பெற்றனர். போட்டி தொடக்கத்தில் 5-வது நிலை வீரராகக் களமிறங்கிய டி.பி.சிங், மொத்தம் 9 சுற்றுகளில் 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்றார்.

  முதல் 5 இடங்களைப் பெற்றவர்கள் விவரம், அடைப்புக்குறிக்குள் அவர்கள் பெற்ற புள்ளிகள்: 1. டி.பி.சிங் (8), 2. அரவிந்த் சிதம்பரம் (7.5), 3. ராம் எஸ்.கிருஷ்ணன் (7.5), பி.பூபாலன் (7.5), 5. ராமநாதன் பாலசுப்பிரமணியம் (7).

  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. இதுதவிர 9, 12, 15, 18 வயதுக்கு உள்பட்ட பிரிவினரில் அதிகப் புள்ளிகள் எடுத்தவர்களுக்குப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

  கோவை ஜி.என். மில்ஸ் நிர்வாக இயக்குநர் செந்தில் சின்னசாமி, கோவை மாவட்ட செஸ் சங்கத் தலைவர் பி.கே.செல்வமுருகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கோவை மாவட்ட செஸ் சங்க செயலாளர் வி.விஜயராகவன், போட்டியின் அறிக்கையை வாசித்தார். கோவை செஸ் மேட்ஸ் சங்க செயலாளர் மோகன்குமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai