சுடச்சுட

  

  புது தில்லி, ஆக. 30: நேரு கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் இந்தியா - கேமரூன் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  தில்லியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்தியா, கேமரூன், நேபாளம், சிரியா, மாலத்தீவுகள் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா லீக் ஆட்டம் ஒன்றில் நேபாளத்துக்கு எதிராக டிரா செய்தது. இதனால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

  இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேமரூன் அணி, மாலத்தீவுகள் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

  இந்த வெற்றி கேமரூன் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றதுடன் மட்டுமல்லாது, இந்தியாவுக்கும் இறுதி ஆட்ட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. மாலத்தீவு அணியின் சவால் முடிவுக்கு வந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai