சுடச்சுட

  

  நியூயார்க், ஆக. 30: யு.எஸ். ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்தியாவின் மகேஷ் பூபதி - ரோஹன் போபண்ணா ஜோடி தோற்று வெளியேறியது.

  கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- பிரிட்டனின் கொலின் ஃபிளம்மிங் ஜோடி முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இவர்கள் பிரிட்டன் - அமெரிக்க ஜோடியான ஆன்ட்ரியா பெட்கோவிக் - எரிக் பட்டர்க்கை 6-2, 7-6(5) என்ற செட் கணக்கில் வென்றனர்.

  தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பூபதி- போபண்ணா ஜோடி, தரவரிசையிலேயே இடம் பெறாத ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ எப்டன்- பெர்ணாட் டாமிக் இணையை எதிர்கொண்டனர். இதில் 3-6, 6-7(4) என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

  ஒலிம்பிக் போட்டியின் போது பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயஸýடன் இணைந்து விளையாட மறுத்தனர். இதனால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. குழப்பங்களுக்கு நடுவே இந்த டென்னிஸ் அணி ஒலிம்பிக் சென்று வெறும் கையுடன் திரும்பியது.

  யு.எஸ். ஓபனில் சானியாவும், பூபதியும் இணைந்து விளையாடவில்லை. இந்நிலையில், பூபதி - போபண்ணா ஜோடியை டேவிஸ் கோப்பை டென்னிஸில் இந்திய டென்னிஸ் சங்கம் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்போது அவர்கள் யு.எஸ். ஓபனிலும் தோல்வியடைந்து விட்டனர்.

  பயஸ் - ஸ்டெபானிக் வெற்றி: இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ரடேக் ஸ்டெபானிக் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் வெற்றி பெற்றது. இந்த இணை ஜெர்மனியின் டஸ்டின் பிரெüன், கிறிஸ்டோபர் காஸ் ஜோடியை 6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai