சுடச்சுட

  
  spt3

  நியூயார்க், ஆக. 30: சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளிஸ்டரஸ், புதன்கிழமை ஓய்வு பெற்றார்.

  யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக முன்னதாக கிம் கிளிஸ்டர்ஸ் அறிவித்திருந்தார்.

  இந்நிலையில் யு.எஸ். ஓபன் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் இளம் வீராங்கனை லூரா ரோப்சனை கிம் கிளிஸ்டர்ஸ் எதிர்கொண்டார். இதில் 7-6 (7/4), 7-6 (7/5) என்ற செட் கணக்கில் லூரா வென்றார். இதன் மூலம் கிளிஸ்டர்ஸ் போட்டியில் இருந்து வெளியேறினார். இதுவே அவரது கடைசி சர்வதேச டென்னிஸ் ஆட்டமாகவும் அமைந்தது.

  29-ம் வயதாகும் கிளிஸ்டர்ஸ் இதுவரை 3 முறை யு.எஸ். ஓபன் சாம்பியனாகியுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸிலும் பட்டம் வென்றார். 2003-ம் ஆண்டில் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

  முன்னதாக 2007-ம் ஆண்டில் குழந்தை பிறப்பை முன்னிட்டு கிளிஸ்டர்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு 2009-ம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் மீண்டும் பங்கேற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai