Enable Javscript for better performance
டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி - Dinamani

சுடச்சுட

    

    டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி

    By dn  |   Published on : 03rd December 2012 02:59 PM  |   அ+அ அ-   |    |  

    stump

    ஆஸ்ட்ரேலியா - தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றது.

    பெர்த்தில் நடைபெற்று வந்த 3வது டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் 1-0 என்ற வெற்றி கணக்கில் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரைக் கைப்பற்றியுள்ளது.

    முதலில் களமிறங்கி விளையாடிய தென்னாப்ரிக்க முதல் இன்னிங்கில் 225 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 569 ரன்களையும் எடுத்தது.

    அடுத்து ஆடிய ஆஸ்ட்ரேலியா, முதல் இன்னிங்சில் 163 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 322 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

    இதனால் 309 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் தென்னாப்ரிக்க அணி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    kattana sevai